Friday, May 2, 2008

தீமிதி திருவிழா...FIRE WALKING FESTIVAL...IMAGES





தீமிதி திருவிழா தென்னிந்தியாவில் தோன்றியது. வழக்கமாக ஐப்பசி மாதத்தில் கொண்டாடப்படும் விழா இது. மகாபாரதக்கதையின் திரெளபதி மாரியம்மனின் அவதாரமாக கருதப்படுகிறார். தீமிதி திருவிழாவிற்கு முன்பாக மகாபாரதக்கதை கூறப்படும். சில இடங்களில் நாடகமாக நடிக்கப்படும். இந்தியாவில் மட்டுமல்லாது சிங்கப்பூர், மலேசியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் தென்னிந்தியர்கள் அதிகமாக வசிக்கும் இடங்களில் தீமிதி திருவிழா கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாட்டில் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரியம்மன் திருக்கோவில் தீமிதி திருவிழா மிகவும் புகழ்பெற்றது. இந்த ஆண்டு அங்கு நடைபெற்ற தீமிதி திருவிழாவில் ஒருலட்சம் பக்தர்கள் தீ மிதித்தார்கள் என்று செய்திகள் கூறுகின்றன.
தஞ்சாவூர் மாவட்டம் தாமரங்கோட்டை கீழக்காடு அருள்மிகு தீக்குதித்த அம்பாளுக்கு நடைபெற்ற தீமிதி திருவிழாவின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்
தொகுப்பு:மு.குருமூர்த்தி cauverynagarwest@gmail.com

1 comment:

Jayakumar said...

அன்புள்ள நண்பரே, எங்களூரில் நடைபெறும் தீமிதி திருவிழா பற்றிய இந்த பதிவிற்கு மிக்க நன்றி.

இந்த பதிவில் உள்ள படங்களையூம் கட்டுரையையும் எனது வலைப்பதிவில் மீள்பதிவாக இடலாமா?

மீண்டும் நன்றி