Saturday, March 15, 2008

ப்ரஹன் நாட்டியாஞ்சலிBRAHAN NATYANJALI



மகாசிவராத்திரியை ஒட்டி நடைபெறும் ப்ரஹன் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி தஞ்சாவூர், திருவையாறு, கும்பகோணம், சிதம்பரம் ஆகிய இடங்களில் நடைபெறுவது வழக்கம்.


2008 ஆம் ஆண்டில் மார்ச் 5 முதல் 10வரை தஞ்சாவூர் ப்ரஹன் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி தஞ்சாவூரில் இயங்கும் தென்னக பண்பாட்டு மையம், மூத்த இளவரசர் பாபாஜி ராஜா போன்ஸ்லே ஆகியோரின் ஒத்துழைப்புடன் தஞ்சாவூர் பெரிய கோவிலில் நடைபெற்றது. சிவபெருமானுக்கு நாட்டிய வடிவில் அஞ்சலி செலுத்தும் இந்த நிகழ்ச்சியில் இவ்வாண்டு சுமார் 400 கலைஞர்கள் பங்கெடுத்துக்கொண்டனர். டெல்லி, கல்கத்தா, பெங்களூர், கொச்சி மற்றும் பூனா இங்கிருந்தெல்லாம் தஞ்சை பெரிய கோவிலில் நாட்டியக்கலைஞர்கள் செலுத்தியஅஞ்சலியைக்காண மக்கள் பெருமளவில் திரண்டனர்.


வரலாற்றுச்சிறப்பு மிக்க தஞ்சாவூர் பெரிய கோவிலில் இந்த நிகழ்ச்சி ஒவ்வோர் ஆண்டும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

தஞ்சாவூர் பெரிய கோவிலைக்கட்டிய இராஜ இராஜ சோழன் காலத்தில் நாட்டிய வடிவில் அஞ்சலி செலுத்தப்பட்டதாக வரலாறு கூறுகிறது. சிவபெருமானை நடராஜர் வடிவத்தில் வணங்குவது தமிழர் மரபு.
வளர்ந்த கலைஞர்களும் வளரும் கலைஞர்களும் தஞ்சாவூர் ப்ரஹன் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் பங்கெடுத்துக்கொள்ளலாம்.


இந்த நிகழ்ச்சியில் மரபுசார்ந்த நாட்டிய நிகழ்ச்சிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

இதைப்போன்றே திருவையாறு ஐயாறப்பர் கோவிலிலும் மூன்று நாட்கள் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. திருவையாறு நாட்டியாஞ்சலி டிரஸ்ட் தலைவர் திரு.வி.கோபாலன், ஆறாவது ஆண்டாக நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு மக்களின் அமோக ஆதரவு இருப்பதாக தெரிவித்தார்
.
இதைப்போன்றே கும்பகோணம், சிதம்பரம் ஆகிய சிவபெருமானின் திருத்தலங்களிலும் இதே நாட்களில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. வளரும் கலைஞர்களும், வளர்ந்த கலைஞர்களும் பங்கெடுத்து அஞ்சலி செலுத்தியது பொதுமக்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.

இது தொடர்பான விவரங்கள் வேண்டுவோர் தொடர்பு கொள்ள:

Brahan Natyanjali Foundation, Dr.V.V.R. Complex, Arulananda Nagar, Thanjavur - 613 007,
Phone:98424-55765, 04362-238235, Email:bnfoundation@rediffmail.com

Natyanjali Trust, Chidambaram. Phone no. 04144-222732

natyanjalikmu@yahoo.co.in or write to the Trustees. Natyanjali Trust Kumbakonam, Moopanar Bangalow, Dr. Besant Road, Kumbakonam - 612 001

தகவல்:மு.குருமூர்த்தி cauverynagarwest@gmail.com

2 comments:

cheena (சீனா) said...

தஞ்சைப் பெருவுடையார் கோவில் நாம் 1955-1963 ல் ஓடி விளையாடிய இடம். அருகே சலசலவென ஓடு புதாறு, பரந்து விரிந்த இடம், பிரமாண்டமான நந்தி, பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய கோவில், அதன் வரலாறு, நிழல் விழாக் கோபுரம், சுத்தமான காற்று, பூங்கா, பராமரிக்கும் கடமை உணர்ச்சி இவை எல்லாம் மறக்க முடியுமா ? இந்தியத் திருநாட்டின் முதல் குடியரசுத் தலைவர் திரு இராஜேந்திரப் பிரசாத் கோவிலுக்கு விஜயம் செய்த போது, படிக்கட்டுகளின் ஓரத்தில் சாரம் (slope)அமைத்தது - நாங்கள் சிறுவர்கள் அதில் விளையாடியது - அகழியில் RSS பயிற்சி பெற்றது - காக்கி ட்ரவுசர், வெள்ளைச் சட்டை, காக்கித் தொப்பி - அடடா = அருமையான நினைவுகளை அசை போட வைத்த பதிவு. அருமை அருமை. பாராட்டுகள்

cheena (சீனா) said...

நண்பரே ! வண்ண மாற்றம் வரவேற்கத்தக்கது. நன்று -ஆவணப்படுத்துதல் தொடரட்டும் - நினைத்தவை ஈடேற இறைவன் துணை புரிவான். வாழ்த்துகள்.